கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் மற்றவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வெளியே சென்றதால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் இருக்கும் பீரோவை யாரோ தீ வைத்து எரித்துவிட்டனர். இதுகுறித்து புதுச்சேரி கவர்னரிடம் செல்போனில் பேசி விட்டதாகவும், அவரின் அறிவுரைப்படி புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அந்த போலீஸ்காரர், பிற அதிகாரிகள் பணி நிமித்தமாக வெளியே சென்றிருப்பதால் அவர்கள் வந்தவுடன் புகார் மனுவை கொடுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண் போலீஸ்காரருடன் தகராறு செய்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரி உடனடியாக இங்கு வரவேண்டும் என கூறிவிட்டு சாலையில் அங்கும், இங்கும் ஓடினார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் கானாவூர் பகுதியை சேர்ந்த ஒரு லாரி டிரைவருடன் வந்திருப்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. விசாரித்து கொண்டிருந்த போதே அந்த பெண் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.