திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷோபனா தனது தாய் மற்றும் சகோதரருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும் குவைத் நாட்டில் வேலை பார்க்கும் திருச்சியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 49 பவுன் தங்க நகைகள், சீர்வரிசை பொருட்களை எனது குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே எனது கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதலாக 50 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு என்னை சித்திரவதை செய்தனர். அதன் பிறகு எனக்கு தெரியாமல் எனது கணவர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுகின்றனர். இதனால் அச்சத்தில் எனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன். எனவே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.