பீகார் மாநிலம் பாட்னாவில், இரவு ரோந்துப் பணியின்போது கர்ப்பிணிப் பெண் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவின் மெரைன் டிரைவ் பகுதியில் இந்தச் சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 51 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸ், பீகார் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
வைரலான வீடியோவில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம், அந்தப் பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் வாகனத்தை எடுக்க விடாமல் தடுக்கிறார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த அதிகாரி வண்டியை வேகமாக நகர்த்த முயல்கிறார். அப்போது, அந்தப் பெண் வாகனத்தைத் தடுக்க முற்படும்போது, ஸ்கூட்டர் சிறிது நகர்ந்து, அந்தப் பெண்ணை இழுத்துச் செல்கிறது.
ये पटना की मरीन ड्राइव की तस्वीरें है,
डबल इंजन सरकार की पुलिस गर्भवती महिला को सड़कों पर गाड़ी से रौंद रही है,
मोदीजी ने ₹10,000 में वोट के साथ माँ – बहनों की जिंदगी भी खरीद ली है? pic.twitter.com/COy8Skh4Fx
— Indian Youth Congress (@IYC) November 18, 2025
“>
இந்தச் சம்பவத்தைக் கண்டித்த இந்திய இளைஞர் காங்கிரஸ், “தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை, வாக்குகளுடன் சேர்த்து ₹10,000 கொடுத்து வாங்கி விட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது பாட்னா காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
