திருச்சி மாநகரத்தின்  போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து, அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை  மீறியதாக 12 ¾ லட்சம் ரூபாய் அபராதமும், 1,331 பேர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அதன்படி  44 இடங்களில் வாகன தணிக்கை சோதனையானது நடைபெற்றது. அதில்  தலைகவசம் அணியாமல் வந்த 804 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் 8 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணமும் அபராதமாக விதிக்கப்பட்டது. காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 108 பேர்கள் மீது ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதமும், அதிவேகமாக மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி வந்த 9 பேர்கள் மீது ரூ.9 ஆயிரமும் விதிக்கபட்டது. மேலும் செல்போன் பேசிக்கொண்டே, வாகனம் ஓட்டி வந்த 49 பேர்களுக்கு அபராதமாக  ரூ.49 ஆயிரமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு நேற்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து விதியை மீறியதாக, 1,331 பேர்கள் மீது வழக்குகளும் மற்றும் அபராத தொகையாக ரூ.12 லட்சத்து 99 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டது. மேலும்  நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.