இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில் நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரித்து வருவதால் இந்த  திட்டத்தின் தொகையை அதிகரிக்க நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

எனவே இந்த கோரிக்கையை ஏற்று நடப்பு ஆண்டின் இறுதிக்குள் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேஷம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால்  மத்திய அரசு இதற்கு முன்னதாக PM கிசான் தொகையை 50% அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.