இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால் அதனை அனைத்து ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டை போலவே ரேஷன் கார்டும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அத்துடன் இந்த ரேஷன் கார்டு இருப்பிட சான்றாகவும் கருதப்படுவதால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதாவது ரேஷன் கார்டு உறுப்பினர்களில் பெயர் மற்றும் ஆதார், மொபைல் எண் மற்றும் முகவரி போன்ற அனைத்து விவரங்களையும் ரேச நாட்டைதாரர்கள் அப்டேட் செய்ய ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை கர்நாடக அரசு கால அவகாசம் அளித்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. ஆன்லைன் மூலமாக அல்லது அருகில் உள்ள ரேஷன் கடைகளில் விவரங்களை அப்டேட் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ள நிலையில் பல சர்வ பிரச்சனை ஏற்பட்டதால் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் நீட்டிக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.