இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும். அதன் பிறகு 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும்.
இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் உட்பட பல்வேறு துறையினரும் பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ள நிலையில், விவசாயிகளுக்கும் பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 8000 ரூபாய் வழங்கப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் தாக்கல் தொடரின் போது பிஎம் கிசான் திட்டத்தில் 8000 ரூபாய் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.