
இந்தியா முழுவதும் பொது இடங்களை அசுத்தமாக்குவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ்ஹரன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு ரயில் நிலைய தூணில் துப்புரவு பெண் ஊழியர் ஒருவர் அதில் இருக்கும் பான் மற்றும் குட்கா எச்சில் கறைகளை மிகவும் சிரமப்பட்டு தேய்த்துக் சுத்தம் செய்வதை காண முடிகிறது.
कृपया आंटी के संदेश को ‘सही लोगों’ तक पहुँचायें. pic.twitter.com/0yJ07hP9ve
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) March 27, 2024
இதுகுறித்து அந்த துப்புரவு பணியாளரிடம் கேட்டபோது, இதுபோன்று செய்யக்கூடாது என பலமுறை கூறியும் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
இதனை சுத்தம் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. இனி யாரும் இதுபோன்ற எச்சில் துப்ப கூடாது என கேட்டுக்கொண்டார். “தயவுசெய்து இவர்களின் செய்தியை சரியான நபர்களுக்கு தெரிவிக்கவும்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோ துப்புரவு பணியாளர்களுக்கு காட்டப்படும் அவமரியாதை மற்றும் பொது இடங்களை பராமரிப்பதில் பொதுமக்கள் காட்டும் அலட்சியம், தூய்மை விதிமீறல் போன்றவற்றை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.