
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஆர்மகெட்டன், பேர்ல் ஹார்பர் போன்ற ஹாலிவுட்டின் அதிமுக்கிய படங்களை தயாரித்த பாப் ஜார்ஜ் (Bob George) விபத்தில் உயிரிழந்தார். 51 வயதாகும் அவர், சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இன்றும் அதேபோல் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தபோது அவர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியிருக்கிறது. இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்