தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பிரபாஸ் இன்று தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இவர் ஒரு படத்திற்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 240 கோடி என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் நடிகர் பிரபாஸ் ஹைதராபாத்தில் 84 ஏக்கர் பரப்பளவில் 60 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு கட்டி உள்ளார். இதனை அடுத்து மும்பை மற்றும் இத்தாலியிலும் சொகுசு வீடுகளை வாங்கியுள்ளார். மேலும் ரேஞ்ச் ரோவர் மற்றும் லம்போகினி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை இவர் வைத்துள்ளார்