
டைரக்டர் ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் “பஹீரா”. இப்படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த 2021 ஆம் வருடம் வெளியாகியது.
கடந்த வருடம் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் இந்த படம் வரும் மார்ச் மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்ந்து இப்படத்தின் 2-வது டிரைலரை அண்மையில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தில் இருந்து “குச் குச் ஹோத்தா ஹை” எனும் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
https://t.co/hfatvRsFdU NEW SONG OF BAGHEERA ❤️❤️❤️
— Prabhudheva (@PDdancing) February 28, 2023