மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை செய்யகூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவை வைத்து பொட்டலம் போடும்போது அதில் இருந்து நச்சு வேதிப் பொருள் உருவாகிறது. இந்த வேதிப்பொருள் உணவில் கலந்து உடலுக்கு பல உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் சூடான உணவுகளை நெகிழி பைகளில் வழங்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது “நெகிழி பைகளில் சூடான உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.