தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் ‘ரத்தக் கலை’க்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தால் பெயின்ட் அடிக்கும் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளது. இதை மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார்  எனவே ரத்த ஓவியங்களை வரைவதற்கும், ரத்த ஓவியக் கூடங்கள் செயல்படுவதற்கும் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.