
ரயில்களில் நள்ளிரவில் போன் சார்ஜிங் செய்வதற்கான வசதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வாரியம் உத்தரவுபடி, ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில்களில் உள்ள செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கு போகும் மின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இது கடந்த பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.
எனினும் கடந்த சில காலமாகவே ரயிலில் பயணிக்கும் பயணிகள் சார்ஜ் பாயிண்டுகள் வேலை செய்யவில்லை என்று ரயில்வே உதவி எண்ணுக்கும், செயலிக்கும் புகார் வருகின்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது, கடந்த 2014ம் ஆண்டில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாய்ண்டுகளுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மின் இணைப்பு ரத்து செய்யப்படும். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.