வருங்கால வைப்புநிதி இருப்பை அதன் சந்தாதாரர்கள் மொபைல் SMS, UMANG ஆப் வாயிலாக ஈஸியாக எப்படி சரிபார்த்துக்கொள்வது என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

தொலைபேசி எண் மூலமாக PF கணக்கு இருப்பை சரிபார்த்தல்

EPF சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா? இல்லையா? என்பதை சரிபார்ப்பதற்கு பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் போதும். இந்த அழைப்பு ஒரு ரிங்கானதும் அதுவாக துண்டிக்கப்படும். இதன் வாயிலாக உங்களது கணக்கின் நிதி இருப்பை அறியலாம்.

 SMS வாயிலாக PF நிதியிருப்பை சரிபார்த்தல்

உங்களது Mobile எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என டைப்செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும். SMS-ல் உள்ள கடைசி 3 எழுத்துக்கள் உங்களுக்கு விருப்பமான மொழியை குறிக்கிறது. இதில் ENG எனில் ஆங்கிலம். ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் மற்றும் குஜராத்தி என மொத்தம் 10 மொழிகளை நீங்கள் தேர்வுசெய்யலாம். UAN நம்பருடன் பதிவுசெய்யப்பட்ட அதே மொபைல் எண்ணிலிருந்து SMS அனுப்ப வேண்டும். உங்களது இறுதி PF பங்களிப்பு, நிதியிருப்பு விபரங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய KYC தகவல் தங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பும்.

உமாங் பயன்பாட்டைப் பயன்படுத்தி நிதியிருப்பை சரிபார்த்தல்

PlayStore/App Storeல் இருந்து UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
உங்களது ஸ்மார்ட் போனில் UMANG செயலியை திறந்து உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். கீழேயுள்ள “AllService” எனும் விருப்பத்தை கிளிக் செய்து, விருப்பங்களின் பட்டியலிலிருந்து “EPFO”-ஐ தேடித் தேர்ந்தெடுக்கவும். உங்களது EPF இருப்பை சரிபார்ப்பதற்கு “View Passbook” என்பதை கிளிக் செய்யவும். அடுத்து உங்களது UANஐ கொடுத்து, “Get OTP” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTPஐ உள்ளீடு செய்து Login என்பதனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது மொபைல் திரையில் அடுத்து தோன்றும் படிகளை பின்பற்ற வேண்டும். அதன்பின் உங்களது EPF இருப்புடன் பாஸ்புக் திரையில் காட்டப்படும்.