டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி தனக்கு உருவான 25 வார கருவை கலைக்க அனுமதி கொடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியின் கருவை கலைப்பதற்கு அனுமதி கொடுத்ததோடு சிறுமியின் கருவை குற்றவாளியின் டிஎன்ஏவை அடையாளம் காண்பதற்காக மருத்துவர்கள் பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன்பிறகு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமி அதனால் உருவாகும் கருவை சுமக்கும் போது ஏற்படும் வலி ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரம் என்று நீதிபதிகள் கூறிய நிலையில், கருக்கலைப்பு மையங்கள் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சட்டவாரியாக மருத்துவ வாரியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.