மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1 ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். 2024 ஆம் வருடம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி தலைமையிலான அரசின், கடைசி முழு பட்ஜெட் இது ஆகும். மத்திய பட்ஜெட் தாக்கலின் நேரடி ஒளிபரப்பு லோக்சபா டிவி, ராஜ்யசபா டிவி, டிடி நியூஸ் போன்றவற்றில் பிப்,.1 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு துவங்கும்.

இது தவிர சில தனியார் சேனல்கள் நிதி அமைச்சரின் உரையை ஒளிபரப்பும். அந்த அடிப்படையில் நிர்மலா சீதாராமனின் உரைக்கு பின், முழு பட்ஜெட்டின் ஆவணமும் பொதுமக்களுக்காக “Union Budget Mobile App” எனும் மொபைல் செயலியில் வெளியிடப்படும். இச்செயலி வாயிலாக பட்ஜெட் ஆவணங்களின் முழுமையான தொகுப்பினை நீங்கள் அணுகலாம் என நிதி அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் OS இயங்குதளங்களில் இச்செயலி கிடைக்கிறது