
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறக்கூடிய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஓய்வூதியத்திற்காக செலுத்தப்படுகிறது. ஊழியர்களின் ஓய்வு காலத்தில் அவர்களை நன்றாக வாழ்க்கை செலவுகளை உறுதி செய்யும் விதமாக இந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் செலுத்தப்படும் மொத்த தொகையையும் ஊழியர்கள் தங்களின் பனிக்காலம் முடிந்துவிட்டால் பெற்றுக் கொள்ள முடியும். ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக pf நிதியிலிருந்து 90 சதவீதம் தொகையை பெறலாம். வேலையில் இருக்கும் போது ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75% பிஎப் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இரண்டு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையும் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. பிஎஃப் நிதியிலிருந்து உங்களது பணத்தை எடுப்பதற்கு அலுவலக pf அதிகாரியிடம் விண்ணப்பித்து பின்னர் EPFO அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். இதில் நிபதனைகளை பூர்த்தி செய்த பிறகு மட்டுமே பிஎஃப் தொகையை நீங்கள் பெற முடியும். ஐந்து வருடங்களுக்கு முன்பு பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு டிடிஎஸ் வரி விதிக்கப்படும். மேலும் ஐந்து வருடங்கள் பணியாற்றிய பின்னர் பிஎப் நிதியிலிருந்து பணம் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு வரி எதுவும் விதிக்கப்படாது.