தமிழகத்தில் தற்போது தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்பொழுதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஒவ்வொரு முறையும் வெளியில் விளையாடிய பிறகு வீட்டிற்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம்.

இந்த காய்ச்சல் என்பது ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும். அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும். இது உடல் சோர்வை உண்டாக்கும் எனவே இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.