சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தினை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். இப்போது இத்திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டியானது வழங்குகிறது. இந்திய அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா துவங்கப்பட்டது. கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு பெண்குழந்தையின் பாதுகாவலருக்கு உதவ இந்த முதலீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டம் தற்போது வருடத்திற்கு 7.6 % வட்டி விகிதத்தை வழங்குகிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்ய விரும்பும் நபர், பெண் குழந்தை பிறந்த பின் 10 வயது வரை குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.250 உடன் எந்நேரத்திலும் திட்டத்தை துவங்கலாம். அதே சமயத்தில் இந்தத் திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் ரூபாய்.1,50,000 வரை டெபாசிட் செய்யலாம். மற்றோரு புறம் நீங்கள் ஏதேனும் வரி விலக்கு திட்டத்தை தேடுகிறீர்கள் ஆனால், சுகன்யா சம்ரித்தி யோஜனா குறித்த புதுப்பிப்புகளையும் தெரிந்துகொள்ளுங்கள். வரிவிலக்கு பெறவும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் வாயிலாக வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் மக்கள் வரிவிலக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்..