PAYTM நிறுவனம், ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையால் பெரும் சிக்கலில் உள்ள நிலையில், PAYTM Payments வங்கியின் வாடிக்கையாளர் கணக்குகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்குகளை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கொடுப்பனவு கழகதுடன் (NPCI) அடுத்த வாரத்தில் ஆலோசனையில் ஈடுபட உள்ளது. சமீபத்தில் PAYTM நிறுவனத்தை அம்பானியின் நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.