வருகின்ற 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு  நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தொடர் எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.  ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில்,  தற்போது அதிகாரப்பூர்வமாக அதற்கான அரசிதழானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசிதழில் வருகின்ற சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் தொடர்பாக உறுப்பினர் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். 75 கால பயணத்தில் நாடாளுமன்றத்தினுடைய பயணங்கள்,  சாதனைகள்,  என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது ?  பல்வேறு அனுபவங்களை  பகிர்ந்து கொள்ளலாம். நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.

உறுப்பினர்கள்  கற்றுக்கொண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு அரசிதழ்  வெளியிடப்பட்டிருக்கின்றது. வருகின்ற திங்கட்கிழமை அன்று நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவதற்காக…  குறிப்பாக பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருக்கக்கூடிய நிலையில்,  தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.