நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் வருடத்துக்கான  பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அன்னை பூமியை காக்க பிரதமரின் பிரணாம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பிரணாம் திட்டத்தில் இயற்கை உரங்கள் பயன்பாடு உறுதி செய்யப்படும். 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் 50 ஆலைகள் தொடங்கப்படும் என்றார்.