நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நிதி சார்ந்த சேவைகளுக்கு கேஒய்சி என்ற தனிநபர் விவரமுறை எளிதாக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனிநபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் என்றும் அனைத்து அரசு சேவைகளிலும் அடையாளமாக பான் எண் பயன்படுத்தப்படும் எனவும் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.