நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1. ரயில்வே துறைக்கு 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த வருடத்தை விட 9 மடங்கு அதிகம்.

2. உணவு தானியங்கள் வளங்கள் திட்டத்திற்கு 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

3. நாடு முழுவதும் புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் உருவாக்கப்படும்

4.பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,000 ஆசிரியர்கள் அடுத்த 3 வருடங்களில் நியமிக்கப்படுவார்கள்.

5. 5 ஜி செயலிகளுக்கான சேவைகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

6. முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு சென்டர்கள் நிறுவப்படும்.

7. அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தலாம்

8. இ கோர்ட் திட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கு 7000 கோடி நிதி ஒதுக்கீடு.

9. கூடுதலாக 50 விமான நிலையங்கள் ஹெலிகாப்டர் தளங்கள் உருவாக்கப்படும்.

10. 10,000 கோடி ஒதுக்கீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

11. 3 கல்வி நிறுவனங்களில் A1 திறனாய்வு மையங்கள்.

12. பெண்கள் 7.5 வட்டி விகிதத்தில் 2 லட்சம் வரை சேமிப்பதற்கான புதிய சேமிப்பு திட்டம் கொண்டுவரப்படும்.

13. கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு காரணமாக 5,300 கோடி நிதி ஒதுக்கீடு.

14. ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும்.

15. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

16. உள்நாட்டில் செல்போன் தயாரிப்பு உதிரிபாகங்களை ஊக்குவிக்கும் விதமாக செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரி குறைக்கப்படும்.

17. மாநிலங்களுக்கான வட்டி இல்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும்.

18. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பேட்டரி கான சுங்கவரி 13 சதவீதமாக குறைப்பு.

19. நடப்பு நிதி ஆண்டில் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை வளர்ச்சியில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிப்பு

20. உதிரி பாகங்களுக்கான சுங்கவரி குறைக்கப்படுவதால் செல்போன் மற்றும் டிவி விலை குறைய வாய்ப்பு. பேட்டரி களுக்கான சுங்கவெரி குறையும் போது மின்சார வாகனங்களுக்கான விலையும் குறையும்.