ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதலில் கண்டியில் நடைபெற்ற குழுநிலை போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்த சூழலில் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூப்பர் 4 சுற்றின் இந்தப் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் காலை முதலே கொழும்பில் வானிலை பிரகாசமாக உள்ளது. மழைக்கான அறிகுறிகள் தெரியவில்லை.இருப்பினும் எந்த நேரத்திலும் வானிலை மாறலாம். 

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் விளையாடவில்லை. இவ்வாறான நிலையில் இரு அணிகளுக்குமிடையே கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட தயாராக உள்ளது கடந்த இரண்டு போட்டியில் கே எல் ராகுல் காயத்தால் ஆடாத நிலையில், இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான ஆடும் லெவனை நேற்றே அறிவித்து விட்டது. முகமது நவாசுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஃபஹீம் அஸ்ரஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.எனவே இந்தமுறை 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

பாகிஸ்தானின் ஆடும் 11 :

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், ஆகா சல்மான், இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஸ்ரஃப், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப்.

டீம் இந்தியாவின் ஆடும் 11 :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.