பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த இஸ்லாமியர் ஒருவர், பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் அத்தியாவசிய பொருட்களை நேர்மையான விலைக்கு வாங்கி எங்களது குழந்தைகளுக்கு கொடுத்திருப்போம்.

 

 

மேலும் தக்காளியை கிலோ 20 ரூபாய்க்கும், கோழிக்கறியை கிலோ 150 ரூபாய்க்கும் வாங்கி இருப்பேன். நமது நாடு தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாமிய நாடாக நிலைத்து விட்டது. ஆனால் இஸ்லாம் தான் இங்கு நிலைக்கவில்லை. அதேபோல் பாகிஸ்தான் பிரதமருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நரேந்திர மோடியின் ஆட்சி சிறந்தது தான். அவரை நாட்டு மக்கள் மதிக்கின்றனர், பின்பற்றுகின்றனர். அதேபோல் அவர் பாகிஸ்தானுக்கு கிடைத்திருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் கையாண்டிருப்பார். அப்படி அவர் கிடைத்தால் நமக்கு செபாஷ்,பெனாசீர்,இம்ரான், ஏன் முஷாரப் தேவையில்லை. உலக அளவில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.