இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் சொல்லும் அளவிற்கு  சிறப்பாக இல்லாமல்  முடிந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவின் பின்னணியில் பாகிஸ்தான் அணியின் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் பாபரின் செயல்திறன் குறைப்பாடுகள் இருந்தன.

பாபர் அசாம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரின் தலைமையில் பாகிஸ்தான் அணி பல தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீண்டும் பாபர் அசாமையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக நியமித்து வைத்தது.

பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் போட்டியிட்டது. ஆனால், பரிதாபமாக அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்த தோல்வி பாகிஸ்தான் அணியின் நிலையை மிகவும் பாதித்தது.

இந்நிலையில், பாபர் அசாம் தனது கேப்டன் பதவியை மீண்டும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்துக்கு முழு கவனம் செலுத்த விரும்புவதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

“>