ஆதார் கார்டு-பான் எண் இணைக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்-பான் எண் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. அதன்படி ஆதார்-பான் எண்ணை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்காதவர்களுக்கு சில நடைமுறை சிக்கல்கள் காத்திருக்கிறது. ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் எண்கள் நிரந்தரமாக செயலிழந்து விடும்.

அவற்றை மீண்டுமாக ஆக்டிவேட் செய்ய விரும்பினால் மிகப் பெரிய தொகையை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். தற்போதைய நிலவரப் படி பான்-ஆதார் இணைக்க தனி நபர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தவேண்டும். ஜூன்-30, 2022 வரை இந்த அபராதமானது ரூ.500 ஆக இருந்தது. ஜூலை 1, 2022 முதல் அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.1000 வசூலிக்கப்பட்டு வருகிறது.