இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புது புது விதமாக மோசடிகள் அரங்கேறி வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. எனவே இன்றைய காலகட்டத்தில் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். கவனமோடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய பணம் அனைத்தும் பறிபோய்விடும்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓடிபி வசதியை ஒரு முறை கடவுச்சொல்லை வழங்கி இருக்கிறது. இது பாதுகாப்பு மிக்க கவசமாக கருதப்படுகிறது.ஆனால் உங்களுடைய otp யை நீங்கள் ஒருவரிடம் சொன்னால் அது உங்களுக்கே ஆபத்தாக முடியும். எனவே உங்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தவறும் இருக்கக்கூடாது. ஓடிபி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களைத் தவிர வேறு யாருக்கும் ஓடிபி நம்பரை கொடுக்கக் கூடாது. மொபைல் போனை ஹேக் செய்வது செல்போனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.