இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் சந்தையானது வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், இது ஆன்லைன் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.  மோசடி செய்பவர்கள் சிறந்த சலுகைகளை காண்பித்து வாடிக்கையாளர்களுக்கு  ஆசைகளை தூண்டி அவர்களை  பயன்படுத்திக் கொள்கிறார்கள், மேலும் இது வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இருவரையும் பாதிப்பதால் இருவரும் எச்சரிக்கையுடன் செயல்படுவது முக்கியம்.

வாங்குபவர்களுக்கு, நம்பத்தகாத தள்ளுபடி சலுகைகளின் மூலம் பொருள்களை வாங்க தூண்டுதல், அவசர முடிவுகள் எடுப்பது மற்றும் தனிப்பட்ட தகவல்களை இழக்க வழிவகுக்கும். எனவே வாடிக்கையாளர்கள் டீல்களின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது, நம்பகமான இணையதளங்களிலிருந்து ஷாப்பிங் செய்வது மற்றும் பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்பவர்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொள்ள வேண்டும்.

விற்பனையாளர்களும் ஆன்லைன் மோசடியிலிருந்து தப்பிக்க,  முதலில்  கட்டண நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். பணம் பெறுவதற்கு QR குறியீடு ஸ்கேன் செய்வதில் கவனமாக இருத்தல்  வேண்டும். பரிவர்த்தனைகளை ஆவணப்படுத்துதல், சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் புகாரளித்தல் ஆகியவை தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முக்கிய படிகள். பொதுவான மோசடிகள் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது. மாறும் டிஜிட்டல் சந்தையில், அறிவும் விழிப்பும் உங்கள் சிறந்த கூட்டாளிகள். மேற்கண்ட  நடைமுறைகளை, பின்பற்றுவதன் மூலம் ஆன்லைன் உலகில் பாதுகாப்பான கவலையற்ற ஷாப்பிங் மற்றும் விற்பனை அனுபவத்தை பெறலாம்.