ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதை திமுக எம்பி வில்சன் சட்ட ஆணையத்திடம் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து எம்பி, ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது. இந்த தேவையில்லாத முயற்சியை எடுக்க வேண்டாம் என முதல்வர் கடிதத்தில் தெரிவித்ததாக அவர் கூறினார். இதற்கிடையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.