மத்திய அரசின் புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் 81 ஆப்ரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. 4 ஆண்டுகள் பதவிக்கால அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் டிப்ளமோ அல்லது 2 ஆண்டுகள் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 28 வயது. எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது விலக்கு உண்டு.

தேர்வு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் நடைபெறும்.

மேலும் தகுதியானவர்கள் [https://www.hal-india.co.in/career](https://www.hal-india.co.in/career) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.10.2024. இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!