
அட்சய திருதியையை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கிய ஒரு டெலிவரி சேவை, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. ஸ்விக்கியின் டெலிவரி நிர்வாகி ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் ஓர் உலோக லாக்கர் பெட்டியை எடுத்துச் செல்ல, அவரது பின்னால் சீருடை அணிந்த பாதுகாப்பு காவலர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலானது. பலரும் “இந்த அளவுக்கு பாதுகாப்பா?” என்ற ஆச்சர்யம் மற்றும் நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து, “உண்மையான தங்க டெலிவரிக்கு உண்மையான பாதுகாப்பு தேவை சகோ” என கலகலப்புடன் பதிலளித்தது.
View this post on Instagram
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் சமீபத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸுடன் இணைந்து, 0.5 முதல் 1 கிராம் வரை தங்க நாணயங்களும், 5 முதல் 20 கிராம் வரை வெள்ளி நாணயங்களையும் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படும் இந்த சேவையில், “அட்சய திருதியை” எனும் புனித நாளில் தங்கம் வாங்குவது செல்வத்திக்கான அடையாளமாக கருதப்படுவதால், வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். ஸ்விக்கியின் இந்த முயற்சி பாரம்பரிய நம்பிக்கைகளை நவீன வசதிகளுடன் இணைக்கும் வகையில் பாராட்டை பெற்றுள்ளது.