
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியாக திருமணத்தை நடத்தி வைத்த நிலையில் மணமகனுக்கும் மணமகளுக்கும் கடந்த வருடமே திருமணம் முடிவாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஒரு வருடமாக பழகிய நிலையில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்த மறுநாளே பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் அது எப்படி என விசாரிக்க கடைசியில் தான் நடந்த உண்மை தெரிய வந்தது.
அதாவது பெற்றோர்கள் இருவருக்கும் கடந்த வருடம் மே மாதம் திருமணத்தை முடிவு செய்தனர். அதன் பிறகு இருவரும் பழக ஆரம்பித்த நிலையில் திருமணம் முடிவானதால் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். அதன் விளைவாகவே குழந்தை பிறந்துள்ளது. பெண் வீட்டார் கடந்த அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த குழந்தைக்கு காரணம் மாப்பிள்ளை தான் என்றாலும் அவர்களின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் ஏற்க மறுக்கின்றனர். இருப்பினும் அந்தப் பெண் பத்து மாதங்களாக எப்படி வயிற்றை மறைத்தார் என்பது அங்குள்ளவர்வர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற நிலையில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.