
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குப்பகோலி என்ற பகுதியில் சலீம் என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியில் உள்ள ஒரு ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றார். அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சலீமை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டில் சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் நிலையில் தற்போது வாலிபர் ஒருவர் ஜிம்மில் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.