நாடாளுமன்றத்தில் மக்களவையில் 31 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்ட 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 31 எம்பிக்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். ஒட்டுமொத்தமாக நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இன்று அவை நடவடிக்கைகளை முடக்கியாக குற்றம்சாட்டி  இவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா. இன்று காலையிலேயே சபாநாயகர் ஓம் பிர்லா நீண்ட விளக்கத்தை அளித்தார்.  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அத்துமீறல் தொடர்பாக விசாரணைக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். நாடாளுமன்றத்திற்கு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு. ஆகவே இதிலே அரசு தரப்பிலே விளக்கம் அளிக்க வேண்டும் என சொல்வது சரியாகவில்லை. நீங்கள் அவை நடவடிக்கைகளை முடக்க கூடாது. தொடர் முழக்கத்தில்  ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

அத்துடன் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி அவைகளிலே போராட்டம் நடத்துவதை தவிர்ப்பது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து கட்சிகளும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள். இருந்த போதும் ஏன் அப்படி நடக்கிறது ? இது சரியில்லை என கேள்வி எழுப்பினார். அவையை முடக்காமல் விவாதங்களிலே எதிர்க்கட்சிகள் பங்கு கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி இன்று காலை முதலே முழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மக்களவை முதலிலே 12 மணி வரை….. பின்னர் 2 மணி வரை….. பின்னர் 2.45 வரை…..

பின்னர் 3 மணி வரை என பலமுறை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது என்றால் ?  எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதனால் திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு,  ஆ.ராசா,  தயாநிதிமாறன்,  தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள்…. இதிலேயே பழனிமாணிக்கம் என மூத்த  உறுப்பினர்களும் அடக்கம்.  அதே போல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்க்குமார், விஜய் வசந்த் உள்ளிட்டோர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட 31 மக்களவை உறுப்பினர்களை ஒரே சமயத்தில் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

ஒரே சமயத்தில் இத்தனை உறுப்பினர்கள் மக்களவையில் இடைநீக்கம் செய்யப்படுவது இந்த முறை மட்டுமே நடைபெற்றிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவிக்கிறார்கள். இதற்கு முன்பு எப்போதாவது இப்படிப்பட்ட எண்ணிக்கையில் நடைபெற்றதா ? என்பது அவர்களுக்கே நினைவு  இல்லை. அந்த அளவுக்கு ஒட்டுமொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இன்று மட்டும் 31 பேர்….. அதற்கு முன்பு 13 என   இப்போது மொத்த எண்ணிக்கை 44 மற்றும் மாநிலங்களவை ஒருவர் என்று 45 வரும் அளவிற்கு இன்று சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே அரசுக்கும்,  எதிர்க்கட்சிக்கும் இடையே உள்ள மோதல் மேலும் வலுத்து இருக்கின்றது. தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் நவாஸ் கனி, திருநாவுக்கரசர்,   ராமலிங்கம் உள்ளிட்ட பெயர்களும் அவை தலைவர் படித்தார். அதை தொடர்ந்து தீர்மானத்திலும் அவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. ஆகவே தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல பல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே மக்களவையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.