திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதனை கவனித்த பொதுமக்கள் மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விபத்துக்குள்ளான மூதாட்டியின் பெயர் ராஜா மணி என்பது தெரியவந்தது. மேலும் காரை ஓட்டிய ஓட்டுநர் அப்துல் சலாம் என்பவர் எனவும் தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் கார் ஓட்டுநர் அப்துல் சலாமை கைது செய்தனர். சாலை கடக்க முயற்சித்த போது மூதாட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.