விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கடந்த 3- ஆம் தேதி பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மூலவர் சிலைக்கு பின்புறம் பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிற்பங்கள் வெளியே எடுத்து தனியாக வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிற்பங்களை ஆய்வு செய்தபோது, 4 சிற்பங்கள் 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கிறது. மற்ற 3 சிற்பங்கள் 18 அல்லது 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருப்பது தெரியவந்தது. இந்த வகையான சிற்பங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சப்த மாதர் சிற்பங்கள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இதன் மூலம் மயிலத்தின் பழமையும், தொன்மையும் தெரியவந்தது என கூறியுள்ளார்.