சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, ஓடும் ரயிலில் முதியவர் ஒருவர் ஆபத்தான வகையில் ஸ்டன்ட் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக இளைஞர்களே இப்படி செய்யும் போது ஆபத்து குறித்து கவலைப்படுவோம். ஆனால் இந்த முதியவரின் சாகசம், நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், ரயிலின் கதவின் கைப்பிடியைப் பிடித்து கொண்டு, மிக அபாயகரமாக முதியவர் சில ஸ்டன்ட்களை செய்து காட்டுகின்றார். அவர், ரயிலின் கற்கள் நிறைந்த தடத்தில் இருந்து ரயிலின் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டு பயணிக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் முதியவரின் துணிச்சலையும், அதன் ஆபத்தையும் கண்டு பதைபதைத்துள்ளனர்.

சில யூஸர்கள், முதியவரின் சாகசத்தை வலிமையாகக் கருதியும், அவரின் தைரியத்துக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளனர். “தாத்தா தன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்” என்றனர். மற்றொருவர், “இவர் முன் டாம் குரூஸ் கூட தோற்றுப்போவார்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கின.