தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது ரஜினியின் ஜெய்லர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு விநிஷ் மில்லினியம் இயக்கத்தில் வெளியாக உள்ள “ஜோரா கைய தட்டுங்க” என்ற திரைப்படத்திலும் அவர் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் யோகி பாபு பெண் வேடமிட்டு நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் லேடி கெட்டப்பில் வைரலாகும் யோகி பாபுவின் புகைப்படத்தினால் ஏஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.