
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி சீருடையை, வீட்டில் வைத்து அயன் செய்துள்ளார். அப்போது அயன் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அரசு சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.