கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இணையதளத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் சித்த மருத்துவர் டாக்டர் ஷர்மிகா. இவர் மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்கள் நுங்கு சாப்பிடலாம். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது. அது நம்மை விட பெரிதாக இருப்பதால் விலங்குகளை நாம் சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் பாதிப்படையும். குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூறும் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் டாக்டர் ஷர்மிகா மீது சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் விசாரணை தொடங்கியது.

டாக்டர் ஷர்மிகா சொன்னது போன்று சித்த மருத்துவத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை என ஹோமியோபதி டாக்டர் ஒருவர் விளக்கம் கொடுத்திருந்ததால் தான் பேசிய வீடியோ தவறு என்று கூறி டாக்டர் ஷர்மிகா மன்னிப்பு கேட்டிருந்தார். இவர் மீது தற்போது விசாரணை நடந்து வருவதால் சித்த மருத்துவம் தொடர்பாக எந்த ஒரு வீடியோக்களையும் வெளியிடக்கூடாது என அவரிடம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்டர் ஷர்மிகாவின் வீடியோவை ஒரு இணையதள வாசி தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அடப்பாவிகளா நொங்கு பனைமரம்னு வீடியோ போட்டுட்டு இருந்த தங்கத்தை கடைசில இப்படி ஒரு வீடியோ போட வெச்சிட்டீங்களே. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.