திண்டுக்கல் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள் உடைய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருக்கும் கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் காகிதம், பாலித்தீன் பைகள் ஆகியவற்றை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த கடைகளில் இருந்து அதிகாரிகள் 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, மூன்று கடைகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுத்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.