நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் நேரடி ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.

அப்போது 2 தங்கும் விடுதிகளில் கட்டிட உரிமம், ஹோம் ஸ்டே உள்ளிட்ட உரிமங்கள் இல்லாமல் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை தங்க வைத்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சுற்றுலா பயணிகளை வெளியேற்றி விடுதிக்கு சீல் வைத்துள்ளனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அருகில் இருந்த மற்றொரு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.