நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் பணியில் ஈடுபட்டபோது 16 வயதுடைய மசினி என அழைக்கப்படும் யானைக்கு பாகன் பாலன் உணவு கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மசினி பாலனை தாக்கி காலால் மிதித்தது. இதனை பார்த்ததும் சக பாகங்கள் ஓடி வந்து சத்தம் போட்டு மசினி யானையை கட்டுப்படுத்தினர். இதற்கிடையே படுகாயமடைந்த பாலன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மசினி யானையை கண்காணித்து வருகின்றனர். குழந்தை போல சுட்டித்தனம் செய்யும் வர்ஷினி யானை திடீரென பாலனை கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.