
அக்டோபர் 1ஆம் தேதி முதல், தனிநபர்களின் அன்றாட நிதிச்சூழலை நேரடியாக பாதிக்கும் வகையில் பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. அதில் முக்கியமாக, சமையல் சிலிண்டர்களின் விலை மாற்றம், வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை, மற்றும் போனஸ் கடன் விதிகளைச் சேர்ந்த சிஇபி அறிவிப்புகள் உள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் பொதுமக்களின் நிதி திட்டங்களை நேரடியாக பாதிக்கும் என்பதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
சமையல் சிலிண்டர் விலை அக்டோபர் 1ஆம் தேதி மாற்றப்படும் என்பதால், மக்கள் குறைந்த விலையில் சிலிண்டர் கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். இதற்குட்பட்ட மற்றொரு முக்கிய மாற்றம், பங்குச் சந்தை போனஸ் கடன் விதிகளின் மாற்றம் ஆகும், இதில் பங்கு வரவுக்கான நேரத்தை 2 நாட்களாக குறைத்துள்ளது. இதன் மூலம், அத்தியாவசிய நடவடிக்கைகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கான புதிய விதிமுறைகள், வாடிக்கையாளர்களின் கணக்குகளை பாதுகாவலர்களுக்கு மட்டுமே திறக்க அனுமதிக்கும் வகையில் மாற்றப்படும். இதன் மூலம், இந்த திட்டத்தில் குழந்தைகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கான சேமிப்பு நடவடிக்கைகள் மேம்படும். இதைத் தொடர்ந்து 4g 5g நெட்வொர்க் களின் தரத்தை உயர்த்த ட்ராயிங் சில மாற்றங்களை செய்துள்ளது. ஜியோ ஏர்டெல் டி எஸ் என் எல் மற்றும் பிற துறை தொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
எனவே, அக்டோபர் 1 அன்று பல விதிகளின் மாற்றங்கள் உங்கள் பண மற்றும் சேமிப்பு திட்டங்களை தாக்கலாம்.