செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அதிகாரத்தில் இருக்கின்ற முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் பசியிலிருந்து விடுதலை… அச்சத்தில் இருந்து விடுதலை…. அறியாமையில் இருந்து விடுதலை… இதுதான் விடுதலையின் குறிக்கோள் என்பதை புரிந்து கொண்டு,  பசியிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு முத்தான திட்டத்தை தலைவர் கலைஞர் கண்விழித்த திருக்குவளையில் தொடங்கி வைத்திருக்கிறார்.

17.50 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டம்  நடைமுறைக்கு வந்திருக்கிறது.அவர் திருக்குவலையில்  தொடங்கி வைத்ததை…  தமிழ்நாட்டில் எல்லா நகரங்களிலும்… ஒன்றியங்களிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எனக்கு தெரிந்து காலை சிற்றுண்டி அருந்தாமல் இருக்கக் கூடாது என்பதை  சுகாதார அமைப்பு அதை கண்டிப்பாகவும், கராராகவும் சொல்கிறது.

இதை உலகத்தில் எந்த நாட்டிலாவது நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா ? எந்த நாட்டிலும் நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறைப்படுத்திய ஒரே ஆட்சி அண்ணன் ஸ்டாலின் அவர்களின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை சரித்திரத்தில் பதிவு செய்திருக்கிறோம். அதிமுக வழக்குகளில் நீதிமன்றத்தால் எடப்பாடிக்கு கிடைத்து இருப்பதை இறுதி தீர்ப்பு என்று சொல்ல முடியாது. இன்னும் நீதிமன்றத்தில்  வழக்கு விசாரணையில் உள்ளது.

சசிகலா பொதுசெயலாளராக என்னை நீக்கியது செல்லாது என்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதனால் அது ஒரு முடிவுக்கு வந்ததாக நான் கருதவில்லை. OPS VS EPS இருவரில் திமுக என்ன கருத்துன்னு தெரியாது. நான் பாதிக்கப்பட்டவங்க பக்கம்தான் எப்பவும் நின்னு இருக்கேன். இப்போது பாதிக்கப்பட்டது பன்னீர்செல்வம். அதனால்  அவருக்கு பன்னீர் தெளிக்கிறேன் என தெரிவித்தார்.