சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சாலை வழியாக சென்றால் சுமார் 7 மணி நேரம் ஆகும். அந்த இரண்டு நகரங்களுக்கும் தொழில் துறை அதிகமாக இருப்பதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் சென்னை – பெங்களூர் இடையே விரைவு சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டமானது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் 18 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பாதையில் 17 மேம்பாலங்கள் உட்பட 160 பாலங்கள் அமைக்கப்படுகின்றன. வருகிற 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் இது செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த சாலை செயல்பாட்டிற்கு வந்தால் இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் ஆனது வெறும் 4 மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.