இனிமேல் ATM-ல் பணம் செலுத்த டெபிட் கார்டு தேவையில்லை எனவும் , UPI மூலம் எளிதாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆக்சிஸ் மற்றும் யூனியன் வங்கி ATM-களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வங்கிகளும் இந்த சேவையை விரிவுப்படுத்த உள்ளன. ATM ஸ்கிரீனில் தோன்றும் QR கோடை உங்கள் UPI ஆப் மூலம் ஸ்கேன் செய்து, ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை வைத்தால், உங்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிடும். இந்த முறை மூலமாக ஒருமுறையில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை செலுத்தலாம்.

இந்த புதிய வசதி, டெபிட் கார்டு இல்லாதவர்கள் அல்லது டெபிட் கார்டை எடுத்துச் செல்ல மறந்துவிட்டவர்கள் ATM-ல் பணம் செலுத்த உதவும். மேலும், இது பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.